தபால் மூலமான வாக்களிப்பு நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவுக்கு வருவதாக ஆணைக்குழு கூறியது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் வியாழக்கிழமை (நவம்பர்...
தபால் மூலமான வாக்களிப்பு நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவுக்கு வருவதாக ஆணைக்குழு கூறியது.
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் வியாழக்கிழமை (நவம்பர் 14ஆம் திகதி) இடம்பெற உள்ளது.
கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகிய தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் முதலாம், 4ஆம் திகதிகளிலும் வாக்களிப்பு இடம்பெற்றது. இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு இன்று 7ஆம் திகதியும் நாளை 8ஆம் திகதியும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இம்முறை 7 இலட்சத்து 38 ஆயிரத்து 50 பேர் (738,050) தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதே அளவான அரச ஊழியர்கள் தபால்மூலம் வாக்களித்திருந்தனர்.
தபால் மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவடைய உள்ளது உள்ளதுடன், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை பொலிஸார் அமுல்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.