முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ச...
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள் போன்றவை வீதியில் வரையப்பட்டும், அச்சிட்டு சிறு துண்டுகளாக வீசப்பட்டும் செல்லப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் நேற்றையதினம் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட போதிலும் ஆரம்பத்தில் அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை .
தொடர்ந்து இன்றையதினம் (14) காலை மீண்டும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸார் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.