மண்டைதீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப...
மண்டைதீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் சுலக்சன் தலைமையில், சக வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மண்டைதீவு பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன் போது மண்டைதீவு மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து கூறி இருந்தனர். குறிப்பாக கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரங்களை மேம்படுத்த உதவ வேண்டும் எனவும் கோரி இருந்தனர்.
மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்ட முதன்மை வேட்பாளர் சுலக்சன், கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் நன்கறிவேன். உங்கள் பிரச்சனைகளை தீர்க்க நிச்சயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். நடைபெறவுள்ள தேர்தலில் மூக்கு கண்ணாடி சின்னத்திற்கு உங்கள் வாக்குகளை அளித்து , எனது இலக்கமான 3ஆம் இலக்கத்திற்கு உங்கள் விருப்பு வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.