வனத்தமுல்ல பகுதியில் 2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை மரக்கறிப் பைக்குள் ஒழித்து பஸ்ஸில் ஏற்றிச் சென்ற நபரை கைது செய்யதுள்ளதாக பொரளை பொலிஸார் த...
வனத்தமுல்ல பகுதியில் 2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை மரக்கறிப் பைக்குள் ஒழித்து பஸ்ஸில் ஏற்றிச் சென்ற நபரை கைது செய்யதுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லேரியாவைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக விதானகேவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொரளை பொலிஸ் விசேட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறிப்பிட்ட இடங்களுக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்தும் நபர் எனவும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ஐஸ் போதைப்பொருளை மரக்கறி பையில் வைத்து போதைப்பொருளை கடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.