இந்த முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறத...
இந்த முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8,361 வேட்பாளர்களில் இதுவரை 1,985 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
690 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இதுவரை 106 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் மட்டுமே உரிய சமர்ப்பிப்புகளைச் செய்துள்ளன.
அத்துடன் தேசிய பட்டியலில் அறிவிக்கப்பட்ட 527 வேட்பாளர்களில் 57 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.