யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டார். விசுவமடுவைச் சேர்ந்த 37 வயதான இளைஞன...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டார்.
விசுவமடுவைச் சேர்ந்த 37 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ 345 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.