காலி - ஹினிதும – மஹாபோதிவத்த பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். சம்பவத்தில் ஹினிதும, அம்பலாங்கொடை ...
காலி - ஹினிதும – மஹாபோதிவத்த பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.
சம்பவத்தில் ஹினிதும, அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்.
உந்துருளியில் பிரவேசித்த இரண்டு பேர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹினிதும காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.