யாழ் ஆரியகுளம் பகுதியில் நபர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட...
யாழ் ஆரியகுளம் பகுதியில் நபர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ஆண் சந்தேக நபர்களும் இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிப்ரவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.