பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்...
பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ய பமுனுகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி, நேற்று (26) இரவு ராகம வல்பொல பகுதியில் பமுனுகம பொலிஸ் அதிகாரிகள் குழுவினால், இந்தக் கொலைக்கு திட்டம் தீட்டியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ராகம - வல்பொல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் மாத்திரம் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.