ஸ்ரீ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க இன்று திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் எம்.பி மிலன்...
ஸ்ரீ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க இன்று திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
காணியொன்றின் வரைபடத்திற்கு அனுமதி வழங்கும்போது இடம்பெற்ற முறைகேடு காரணமாக அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் மேற்படி சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.