மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் 3 ஆம் கட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்...
மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் 3 ஆம் கட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் 1 ஆம், 2 ஆம் கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,
குறித்த துறைமுக அபிவிருத்தி பணிகள் 3 ஆம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இக்கட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்ள மீனவ சமூகம், கிழக்கு மற்றும் தென் மாகாணத்திலிருந்து வருகைதரும் மீன்பிடிப் படகுகளுக்கான நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், மீனவர்களுக்குத் தேவையான வலை தயாரிக்கும் வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் வான்வழிச் செய்திப் பரிமாற்ற வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் 3 ஆம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள தரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும்,
கருத்திட்டக் காலப்பகுதியை 2027 வரைக்கும் நீடிப்பதற்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.