யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டுவருகின்றது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்....
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டுவருகின்றது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட பெற்றோல் விநியோகம் தொடர்பில் அரசாங்க அதிபரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் யாழில் 31 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 264,000 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றையதினம் 28 எரிபொருள் நிலையங்களுக்கு வட பிராந்திய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் 250,800 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரித்தார்.