சாவகச்சேரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைதான மூன்று மாணவர்களையும் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சாவகச்...
சாவகச்சேரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைதான மூன்று மாணவர்களையும் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று மாணவர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை மூவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து அவர்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி , மருத்துவ சான்றிதழ்களை பெற்று , சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , மூவரையும் , சிறுவர் நன்னடத்தை பிரிவினர் ஊடாக நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , தான் ஐஸ் போதை பொருளை வாங்குவதற்காக மாணவர்களுக்கு மாத்திரை விற்று வருவதாக தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.