2026 ஆம் ஆண்டுக்கான ஆடவர் இருபதுக்கு உலக கிண்ணத் தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்...
2026 ஆம் ஆண்டுக்கான ஆடவர் இருபதுக்கு உலக கிண்ணத் தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
உலக கிண்ணத் தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இந்தியாவில் குறைந்தது ஐந்து இடங்களிலும் இலங்கையில் இரண்டு இடங்களிலும் போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் விளையாடுமா? இல்லையா என்பதைப் பொறுத்து இறுதிப் போட்டி அகமதாபாத் அல்லது கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அரசியல் உறவுகள் தற்போது பதட்டமாக இருப்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கு ஒன்று தங்கள் நாடுகளில் விளையாடுவதில்லை என அறிவித்துள்ளன.
தற்போது, 2026 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண டி20 தொடரில் விளையாடவுள்ள 15 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன
இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தகுதிப் பெற்றுள்ளன.
அடுத்த வருடத்திற்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரை நடத்துவதற்கான தற்காலிக காலவரையரையினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது
இதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 15 முதல் மே 31 வரை நடத்தப்பட வாய்ப்புள்ளது.
அதற்கு முன்னர் ஜனவரி 11 முதல் 31 வரை இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி - 20 தொடர் நடத்தப்படவுள்ளது.
எனவே இந்த இடைப்பட்ட காலத்திலேயே உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்படுகிறது.